விஜய், கமல் இணையும் பிரம்மாண்ட படம்.. அந்த இயக்குனரை நினைச்சாதான் பயமாருக்கு

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றிக்கு பிறகு இப்போது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் பிறகு அவருடைய 67 வது படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே மாஸ்டர் படத்தில் பணியாற்றினார்.

தளபதி 67 கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டது. இதில் விஜய்க்கு வில்லனாக பிரபலமான 7 நடிகர்கள் நடிக்கின்றனர். மேலும் பல வருடங்களுக்கு பிறகு விஜயும் பிரகாஷ் ராஜும் இந்த படத்தில் நடிக்க இருக்கின்றனர். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

Also Read: ரஜினியை வைத்து பஞ்சாயத்து பேசும் எஸ்.ஏ.சந்திரசேகர்.. அதுக்கு விஜய் கொடுத்த ரியாக்சன்

ஏற்கனவே விஜய் கௌதம் இயக்கத்தில் நடிக்க இருந்த ‘யோகன் அத்தியாயம் ஒன்று’ ஒரு சில காரணங்களால் பாதியிலேயே நின்று விட்டது. இந்நிலையில் GVM மீண்டும் விஜயிடம் ஒரு கதையை சொல்லியிருக்கிறார். கதை பிடித்து போன விஜய் 67 முடிந்ததும் பண்ணலாம் என்று ஓகே சொல்லிவிட்டாராம்.

விஜய்-GVM கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த படத்தை உலக நாயகன் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. அப்படியென்றால் விஜய் கமலின் தயாரிப்பில் நடிக்கும் முதல்படம் இதுவாகும்.

Also Read: தளபதியின் 66வது படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுதான்.. பக்கா மாஸ் கேரக்டர்!

GVM ஏற்கனவே கமலஹாசனின் தீவிர ரசிகர். இவர் கமலை வைத்து ‘வேட்டையாடு விளையாடு’ என்னும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தார். எனவே இந்த படமும் பெரிய ஹிட் ஆகிவிட வேண்டும் என்று மிகத் தீவிரமாக இருக்கிறார்.

விஜய் வாரிசு படத்தில் மீண்டும் ஒரு குடும்ப பின்னணி கொண்ட கதையில் நடித்துக் கொண்டிருக்கிறார். மோஸ்ட் வான்டெட் இயக்குனர் லோகேஷ் விஜய்க்காக பக்காவாக கதையா ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அடுத்த படம் GVM இயக்கத்தில், கமல் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைய இருக்கிறது.

Also Read: விஜய்யை வைத்து தேசிய பிரச்சினையை கையில் எடுக்கும் வெற்றிமாறன்.. போடு, கொல மாஸ்!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்