Connect with us
Cinemapettai

Cinemapettai

இயக்குனர் கவுதமன் மீது தேச பாதுகாப்பு சட்டம் பாய வேண்டும்: கொளுத்திப் போட்டார் ஹெச் ராஜா!!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இயக்குனர் கவுதமன் மீது தேச பாதுகாப்பு சட்டம் பாய வேண்டும்: கொளுத்திப் போட்டார் ஹெச் ராஜா!!

திரைப்பட இயக்குனர் கவுதமன் மீது தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரைப்பட இயக்குனர் கவுதமன் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை சென்னை கத்திபாரா மேம்பாலத்திற்கு சங்கிலியால் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அலுவலகம் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்பவர்கள் செல்ல முடியாமல் தவித்தனர். விரைந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி, பூட்டை உடைந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கவுதமன் உள்பட 6 பேரை கைது செய்தனர். இவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

இதற்கு டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ள ஹெச் ராஜா, ”திரைப்பட இயக்குனர் கவுதமன் மீது தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இவருக்கு உலகின் பல பகுதிகளில் இருந்து பணம் வருவதாக சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top