Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் முறையாக யு சான்றிதழ் வாங்கிய ‘A’ பட இயக்குனர்..

இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமாரின் அடுத்த படத்தின் சென்சார் சான்றிதழ் ரிசல்ட்டால் கோலிவுட்டே செம ஷாக்கில் இருக்கிறது.
தமிழ் சினிமாவில் வெளியாகும் சில படங்களில் ஆபாசம் இருக்கும் என தான் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், படமே அடல்ட் கதையில் இயக்கி வெளியிட்டு ட்ரெண்ட் படைக்கிறேன் என்ற பெயரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ஹர ஹர மகாதேவகி. கௌதம் கார்த்திக் நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்திருந்தனர். படமும் திரையரங்கில் வெளிவந்தது ஆனால் பலர் எதிர்பார்த்தது போல இல்லாமல் படம் மாஸ் ஹிட் அடித்தது.
இதை தொடர்ந்து, சந்தோஷ் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. கௌதம் கார்த்திக்கே இப்படத்தின் நாயகனாக நடித்திருந்தார். ஒரு நாயகிக்கு பதில் மூன்று பேர் ஜோடி போட்டு இருந்தனர். முதல் படத்தில் கூட அங்கு இங்கு இருந்த ஆபாசம் இப்படத்தில் முழுக்க முழுக்க காட்சிப்படுத்தி இருந்தார். இப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பலரும் தங்களது கண்டனத்தை ஓபனாக பதிவு செய்தனர். இப்படம் தமிழ் சினிமாவிற்கு சாபக்கேடு எனவும் பலர் குற்றம் சாட்டினர். இருந்தும், எல்லாரது எதிர்ப்பையும் மீறி ரிலீசான திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த வருட ஹிட் பட்டியலில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் பல கோடி வசூலையும் பெற்றது. இவரின் இரண்டு படங்களுமே தணிக்கையில் க்ளீன் ஏ சான்றிதழை பெற்று இருந்தது.
இந்நிலையில், சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த படமான கஜினிகாந்த் தணிக்கையில் யு சான்றிதழை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஆர்யா, சாயிஷா இருவரும் ஜோடி போட்டு இருக்கிறார்கள். கருணாகரன், சதீஷ், காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஸ்டூடியோகிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சந்தோஷ் பி ஜெயக்குமாருக்கு யு சான்றிதழ் வாங்கிய முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
