தல 57வது படத்தை இயக்கி வருகிறார் சிவா. ஐரோப்பாவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு சமீபத்தில்தான் படக்குழு சென்னை திரும்பியது.

இந்நிலையில், 60 நாட்களில் முடிக்க வேண்டிய படப்பிடிப்பை வெறும் 32 நாட்களிலேயே முடித்தால் பல கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி உலா வந்தது.

தற்போது அதை மறுத்துள்ளது படக்குழு. உண்மையில் 35 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் எடுக்கவேண்டிய காட்சிகளை மூன்று நாட்கள் முன்னதாகவே படமாக்கிவிட்டு இந்தியாவிற்கு திரும்பியதாக கூறியுள்ளனர்.