5 படத்திலும் முருகர் பெயரை வைத்த தரணி.. கபடியில் பந்தாடிய தளபதி சரவண வேலு

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் தரணி. இவர் தன்னுடைய படங்கள் எல்லாவற்றிலும் வித்தியாசத்தை காட்டி உள்ளார். தரணி மிகுந்த கடவுள் பக்தி உடையவராம். அதுவும் முருகனின் தீவிர பக்தரான இவர் தனது படங்களில் ஹீரோக்களின் கதாபாத்திரங்களில் முருகன் பெயர்கள் தான் வைத்துள்ளார்.

தில்: தரணி இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு விக்ரம், லைலா, விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தில். இப்படத்தில் விக்ரமுக்கு முருகப்பெருமானின் மற்றொரு பெயரான கனகவேல் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. அதேபோல் தில் படம் விக்ரமுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

தூள்: தரணி இயக்கத்தில் விக்ரம், ஜோதிகா, விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தூள். இப்படத்தில் விக்ரம் ஆறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். தூள் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

கில்லி: தளபதி விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் கில்லி. இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் விஜய்யின் தந்தையாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி சிவசுப்பிரமணியன் ஆகவும் விஜய் சரவண வேலுவாகவும் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் பிரகாஷ்ராஜின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

குருவி: தரணி இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு விஜய், திரிஷா, சுமன், விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் குருவி. இப்படத்தில் விஜய் வெற்றிவேல் ஆக நடித்திருந்தார். இப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்திருந்தார். ஆனால் குருவி படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை கவரவில்லை.

ஒஸ்தி: தரணி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஒஸ்தி. இப்படத்தில் சிம்பு, ஜித்தன் ரமேஷ், ரிச்சா, கங்கோபாத்யா சோனு சூட் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் சிம்பு ஒஸ்தி வேலன் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்