Tamil Cinema News | சினிமா செய்திகள்
உங்களுக்காக கதையை மாற்ற முடியாது… ஒல்லிக்கு ஏமாற்றம் தந்த இயக்குநர்!
ஒல்லி நடிகருக்கு தனது மாமனாருடன் ஒரு படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்று ஆசையாம். தான் தயாரிக்கும் படத்திலேயே அதை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.
படத்தை இயக்கப்போகும் இயக்குநரிடம் தனக்கு ஒரு ரோல் சேர்க்கும்படிக் கேட்டுக்கொண்டாராம். ஆனால் இயக்குநரோ நான் நடிகர்களுக்காக கதை தயார் செய்வதில்லை.
கதையை மாற்ற மாட்டேன் என்று உறுதியாக இருந்துவிட்டாராம். இதைக் கேள்விபட்ட இயக்குநர்கள் மாமனாரையும் மருமகனையும் இணைத்து கதை தயார் செய்து ஒல்லியின் வீட்டுக் கதவைத் தட்டி வருகிறார்கள்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
