ஹைதராபாத்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரபல தெலுங்கு இயக்குனர் தாசரி நாராயண ராவ் படமாக எடுக்க நினைத்திருந்தார்.
இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்து அவர் காலமானது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் பாலகொல்லுவில் பிறந்தவர் தாசரி நாராயண ராவ். தமிழ், தெலுங்கு மற்றும்

ஹைதராபாத்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரபல தெலுங்கு இயக்குனர் தாசரி நாராயண ராவ் படமாக எடுக்க நினைத்திருந்தார்.
இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்து அவர் காலமானது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் பாலகொல்லுவில் பிறந்தவர் தாசரி நாராயண ராவ். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் 151 படங்களை இயக்கியுள்ளார். இரண்டு முறை தேசிய விருது வாங்கியுள்ளார். 9 நந்தி விருதுகளும், 4 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த தாசரி நாராயண ராவ், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க எண்ணினார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படத்தை எடுக்க உள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

அவர் தனது படத்திற்கு அம்மா என்ற தலைப்பை தேர்வு செய்து பதிவும் செய்துவிட்தாகவும் கூறப்பட்டது. படத்தை தாசரி நாராயண ராவே தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அப்போது ஜெயலலிதாவாக நடிக்க ஆசையாக இருப்பதாக நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் த்ரிஷா தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்குறைபாட்டால் அவர் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, கடந்த வாரம் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவால் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.