Connect with us

Cinemapettai

ஆணுறை கொண்டு சென்றால் பெண்கள் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்கலாம்.. சர்ச்சையை கிளப்பிய இயக்குனர்

daniel-sarwan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆணுறை கொண்டு சென்றால் பெண்கள் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்கலாம்.. சர்ச்சையை கிளப்பிய இயக்குனர்

தற்போது நாடெங்கும் பாலியல் வன்கொடுமை என்பது தலைவிரித்தாடுகிறது. அதற்கு பல பெண்களும் பலியாகி வருவது தொடர்கதையாகியுள்ளது. இதற்கு கொடூரமான சட்டங்களை இயற்றி பாலியல் தொல்லைகளில் ஈடுபடுபவர்களை தூக்கில் போட வேண்டும் என போராட்டம் வலுத்து கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில்தான் இயக்குனர் டேனியல் ஷர்வன் என்பவர் கேவலமான பதிவு ஒன்றை தனது சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதாவது பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம், அதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்படுவது தான் எனவும், இதனால்தான் ஆத்திரமடைந்து கொலை செய்கிறார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு பெண்கள் ஒத்துழைக்க வேண்டுமென சர்ச்சையான கருத்தை முன்வைத்து கூறியது பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்னும் கேவலமான பேச்சையும் ஹைலைட் செய்துள்ளார்.

அதாவது பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படும் ஆண்களுக்கு பெண்கள் ஆணுறை கொடுத்து உதவ வேண்டும் எனவும் மட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சத்தில் இருந்த மக்கள் அவரை அசிங்க அசிங்கமாக திட்டி வருகின்றனர்.

இவர் தெலுங்கானா டாக்டர் பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்டதற்கு பிறகு இந்த கருத்தை பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

daniel-sarwan-fb-02

daniel-sarwan-fb-02

daniel-sarwan-fb

daniel-sarwan-fb

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top