Connect with us

Cinemapettai

விஜய்யுடன் மோதப்போகும் இயக்குனர் சேரன்

Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யுடன் மோதப்போகும் இயக்குனர் சேரன்

vijay-irecto-cheranஇயக்குனர் சேரன் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு C2H என்ற திட்டத்தின் மூலம் டிவிடி மூலம் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. டிவிடிக்களும் சரியாக விற்பனையாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய சேரன் முடிவு செய்துள்ளார்.

இந்த படம் வரும் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகிறது. இதே தினத்தில்தான் விஜய்யின் ‘தெறி’ ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷர்வானந்த், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ், சந்தானம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சினேகா மற்றும் பிரசன்னா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். சேரன் இயக்கிய இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top