என்னை பிக் பாஸ் வீட்டிற்கு போக சொன்னது இவர்தான்? சேரன் உருக்கமான உரையாடல்

நேற்றைய பிக் பாஸ் வீட்டில் மொட்டை கடுதாசி டாஸ்கில் சரவணன் எழுதிய கடிதம் சேரனுக்கு வந்தது. அது என்னவென்றால் இயக்குனராக தமிழ் திரையுலகத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு  என்ன காரணம் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர் உருக்கமாக கூறிய பதில் என்னவென்றால் நான் ஆட்டோகிராப் படத்திற்குப் பின் எந்த ஒரு வெற்றிப்படம் கொடுக்கவில்லை. அதனால் மக்கள் என்னை மறந்து இருக்க வாய்ப்புகள் நிறைய உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதனைப் பற்றி நான் விஜய் சேதுபதியிடம் கேட்டதற்கு அவர்தான் இதனைக் கூறினார்.

கடந்த நான்கு வருடங்களாக நீங்கள் பட்ட கஷ்டங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டாக கூறுங்கள் அது மக்கள் மனதில் இடம் பிடிக்கும். நீங்கள் மீண்டும் திரையுலகத்திற்கு ஆட்டோகிராப் போன்ற படங்களை கொடுப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் உங்கள் கடன் சுமை தீரும்,  மக்களுக்கு உங்கள் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியதால்தான் நான் இங்கு வந்து நிற்கிறேன் என்று உருக்கமாக பேசினார்.

Leave a Comment