கங்காரு , அமைதிப்படை 2  போன்ற படங்களை தன் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் பானரில் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி . இவர் தற்போழுது மிக மிக அவசரம் என்ற படம் மூலம் இயக்குனர் ஆகிறார்.

கதையின் நாயகி ஒரு லேடி கான்ஸ்டபிள் . இதுவரை  யாருமே எடுக்காத பெண் போலீசாரின் விஷயங்களை பற்றி இப்படம் பேசப்போகிறது .

ஸ்ரீப்ரியங்கா நாயகியாக, கோரிப்பாளையம் அரீஷ் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்தின் கதையை கேட்டு இம்ப்ரெஸ் ஆன இயக்குனர் சேரன் இப்படத்திற்கு ஒரு பாடல் எழுதி உள்ளார் . ” பெண்ணிற்கோர் தீமை செய்தோம் ..” என்று  தொடங்குகிறதாம் அப்பாடல்.

காவல் துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய உள்ளார் சுரேஷ் காமாட்சி.