சேரனின் வாழ்க்கையில் நடந்த சோகம்.. அதிர்ந்து போன பிக்பாஸ் வீடு மற்றும் ரசிகர்கள்

இயக்குனர் சேரன் இதுவரை 10 படங்கள் இயக்கியுள்ளார். அதிலும் கடைசியாக வந்த ‘திருமணம்’ என்ற படம் அவ்வளவாக ஓடவில்லை, இதற்கு மனதளவில் அவர் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பதே உண்மை.

சேரனின் மனைவி செல்வராணி, அவரின் மூத்த மகளின் பெயர் நிவேதா பிரியதர்ஷினி, இளைய மகளின் பெயர் தாமினி. தாமினி சேரனின் பேச்சை கேட்காமல் ஒரு இளைஞனை காதலித்து அவருடன் சென்று விட்டாராம்.

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த சேரன் குடும்பத்தினர் இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு வருடங்கள் ஆகிவிட்டது. இதனால்தான் இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப், பொக்கிஷம், பிரிவோம் சந்திப்போம் போன்ற வெற்றிப் படங்களை அவரால் கொடுக்க முடியவில்லை.

இதனை தோழரான சமுத்திரக்கனி ஒரு பேட்டியில் கூட கூறியிருப்பார். இதையே நேற்று பிக் பாஸ் வீட்டிலும் சண்டையில் அழுது புலம்பியது என்னவென்றால், எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. ஆகையால் என்னை அசிங்கப்படுத்தாதீர்கள் என்று கூறி வருத்தப்பட்டார்.

Leave a Comment