இளைய தளபதி விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தில் விஜய் எப்படி நடிக்க சம்மதித்தார் என்பதே பலரின் கேள்வியாக இருந்தது, ஏனெனில் ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த அழகிய தமிழ் மகன் தோல்வி என்பதால் தான்.

இந்நிலையில் பரதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘முதலில் இந்த கதையை நான் விஜயா நிறுவனத்திடம் தான் கூறினேன், அவர்கள் தான் விஜய்யிடம் இதை கூறுங்கள் என்றார்.

விஜய்யும் இக்கதையை கேட்டு தனக்கு மிகவும் பிடித்ததாக கூறினார், தற்போது படத்தின் படப்பிடிப்பு தளங்களை தேர்ந்தெடுக்கும் வேலைகள் நடந்து வருகின்றது.

ஹீரோயின் யார் என்பது இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தெரிய வரும்’ என கூறியுள்ளார்.