Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலாவுக்கு வந்த சோதனை! எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே
பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா படம் முடிவடைந்த நிலையில் அதன் ஆடியோ ரிலீஸ் வேலூரில் நடக்க இருக்கிறது. இது அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும். செப்டம்பர் 22-ஆம் தேதி வேலூரில் இதன் ஆடியோ ரிலீஸ் விழா நடக்கிறது. ஏன் வேலூரில் ?
கதைப்படி வேலூரில் ஏதோ இருக்கிறதா என்று பார்த்தால் அப்படி எல்லாம் எதுவும் இல்லை படத்தின் தயாரிப்பாளருக்கு வேலூர் சொந்த ஊராம் அதனால் தயாரிப்பாளர் ஆசைப்பட்ட காரணத்தினால் ஆடியோ ரிலீஸ் விழா வேலூரில் வைக்கிறார் என்றார்கள் படக்குழுவினர்.
இதுவே பழைய பாலாவாக இருந்தால் இப்படி எல்லாம் நடக்கவே நடக்காது பாலா படமென்றால் அதில் பாலா மட்டும்தான் அவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டும்தான் செய்ய வேண்டும் ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சில தோல்விப் படங்கள் கொடுத்தாலும் பாலாவை வைத்து தயாரிப்பதற்கு யோசித்தனர் ஆனால் இதன் தயாரிப்பாளர் கொஞ்சம் நிறையவே பணம் செலவு பண்ணியுள்ளார். அதனால்தான் பாலாவிடம் இந்த மாற்றம்.
