Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலாவால் பட்டை தீட்டப்படும் R K சுரேஷ்.. ஒரே படத்துக்காக 105 கிலோ உடலை ஏற்றி இறக்கிய புகைப்படம்
வித்தியாசமான கதைக்களம் அமைத்து ஒரு நடிகனின் தோற்றத்தை மட்டுமல்லாமல், வாழ்க்கையையே புரட்டி போடுபவர் தான் இயக்குனர் பாலா. பாலா இயக்கத்தில் 2018-இல் ஜோதிகா மற்றும் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த நாச்சியார் படம் வசூல் வெற்றி பெற்றது.
இந்த படத்தில் ஜோதிகாவின் திமிர்த்தனமாக கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதற்கு அடுத்தபடியாக பாலா ஆர் கே சுரேஷ் வைத்து ஜிஜோ ஜார்ஜ் நடிப்பில் வெளியான ‘ஜோசஃப்’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கை உருவாக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஆர் கே சுரேஷ் இரண்டு கதாபாத்திரத்தில் வருவதாகவும், அதற்காக தனது உடலமைப்பை 105 கிலோவிலிருந்து 79 கிலோ அளவுக்கு மாற்றியுள்ளார். பாலாவின் பிடியில் சிக்கிக் கொண்டால் நொங்கை பிதுக்கி விடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஆர் கே சுரேஷ்யை இயக்குனர் பாலா பிதாமகன் விக்ரம் போல் பட்டை தீட்டி உள்ளார் என்று தான் கூற வேண்டும். ஆர் கே சுரேஷ் ஏற்கனவே பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் கொடூர வில்லனாக நடித்து இருப்பார்.
விஷால் நடிப்பில் வெளிவந்த மருது படத்தில் ரோலக்ஸ் பாண்டி என்ற கதாபாத்திரம் மிகத் தரமாக நடித்திருப்பார். இவரின் பிதாமகன் விக்ரமை போல் மாறி இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
தற்போது உடல் இடை ஏற்றி, இறக்கிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

rolex-suresh
