Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு வழியா பாலாவுக்கு கிடைத்த புது ஹீரோ.. இவரை வச்சாவது சூப்பர்ஹிட்டு தருவாரா?
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் பாலா. ஆரம்ப காலகட்டங்களில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா, விக்ரம் போன்றவர்களுக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
ஏன் ஆர்யா, அதர்வா போன்ற வெளியில் தெரியாத நடிகர்களைக் கூட தன்னுடைய இயக்கத்தின் மூலம் அனைவருக்கும் பிரபலமாக மாற்றிவிட்டார். ஆனால் சமீபகாலமாக பாலாவின் படங்கள் மக்களிடையே பெரிய அளவு வரவேற்பு.
தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற படங்கள் பெரிய அளவு வசூல் செய்யாது அவரை சோதித்தது. மேலும் ஒரு சோகமாக விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த வர்மா என்ற படத்தை இயக்கினார். பாலா இயக்கியது பிடிக்காமல் அந்த படத்தை டிராப் செய்தார் விக்ரம்.
பிறகு ஆதித்யா வர்மா என்ற பெயரில் வேறு ஒரு இயக்குனர் இயக்கி வெளியான அந்த படம் பெரும் தோல்வியைத் தழுவியது. இதனால் பாலா இயக்கிய வர்மா படத்தை எதிர்பார்த்து பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடைசியில் OTT தளத்திலாவது வெளியிடுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தற்போது பாலா அடுத்ததாக பிரபல இசையமைப்பாளர் ஒருவரை ஹீரோவாக வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக வலைப்பேச்சு நண்பர்கள் அவர்களது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். அவரும் சமீபகாலமாக தோல்வியை தழுவிக் கொண்டிருக்கிறார். இந்த கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இப்போதே கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வரணும்.. பாலா பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரணும்!
