சமீபத்தில் இயக்குனர் பாலா தன்னுடைய மனைவி முத்து மலரை விவாகரத்து பெற்று பிரிந்தார். இதனால் இவர்கள் இருவரின் விவாகரத்து பற்றி பல்வேறு செய்திகளும், சர்ச்சையான விஷயங்களும் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இவ்வளவு விமர்சனங்களுக்கு இடையிலும் சம்பந்தப்பட்ட அவர்கள் இருவரும் இதை பற்றிய எந்தவிதமான கருத்துகளையும் கூறாமல் மவுனம் சாதித்து வருகின்றனர். இந்நிலையில் பிரிவுக்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு திருமண விழாவில் சந்தித்துள்ளனர்.
பாலா, தமிழச்சி தங்கப்பாண்டியனின் மகள் திருமண விழாவிற்கு சென்று இருக்கிறார். அந்த விழாவில் பாலாவின் மனைவியும் தன் மகளை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். விழாவில் தன் அப்பாவை பார்த்த மகள் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று அப்பாவின் மடியில் உட்கார்ந்து அவரை கொஞ்சினாராம்.
மகளை பார்த்த சந்தோஷத்தில் பாலாவும் தன் மகளிடம் ஆசையாக பேசினாராம். அவருடைய மகளும் பாலாவின் தலையில் செல்லமாக தட்டுவதும், சேட்டை செய்வதும் என்று தன் பாசத்தை அப்பாவிடம் காட்டி இருக்கிறார். இப்படி இருவரும் பாச பிணைப்பில் இருக்க பாலாவின் மனைவி முத்து மலரும் அந்த விழாவில்தான் இருந்திருக்கிறார்.
ஆனால் பாலா தன் மனைவியை திரும்பிக்கூட பார்க்காமல் தன் மகளை மட்டும் பார்த்து விட்டு சென்றிருக்கிறார். மகள் மீது அதிக பாசம் கொண்ட அவர் தன் மகளைப் பிரியும் அந்த நேரத்தில் சிறிது கண் கலங்கியும் இருக்கிறார். இந்த செய்தி பலருக்கும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.
ஏனென்றால் பெற்றவர்கள் மிகவும் சுலபமாக விவாகரத்து செய்துவிடலாம் என்று முடிவெடுத்து விடுகின்றனர். ஆனால் அவர்களின் இந்த முடிவால் பாதிக்கப்படப் போவது என்னவோ அந்த பிஞ்சு குழந்தை தான். அப்பாவா, அம்மாவா என்று தேர்வு செய்ய முடியாமல் அந்த குழந்தை தான் பாவம் தவித்து போகிறது.
இது பாலாவின் விஷயத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு விவாகரத்து சம்பவத்தின் போதும் பல குழந்தைகள் இப்படித்தான் தவிக்கின்றனர். சிறிது நேரம் மனம் விட்டு பேசி, விட்டு கொடுத்தாலே போதும் இதுபோன்ற விவாகரத்து சம்பவங்கள் குறைந்துவிடும்.