Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆதித்ய வர்மா ரீமேக்கால் நொந்த பாலா.. அடுத்தது இயக்கப்போவது இந்தப் பெரிய நடிகரையா?
இயக்குனர் பாலா என்றால் தமிழ் சினிமாவின் தனித்துவம் என்று பொருள். அந்த அளவு தரமான படங்களை கொடுத்துள்ளார். ஆனால் அவர்மீது நீண்ட நாட்களாக இருக்கும் குற்றச்சாட்டு, படப்பிடிப்பில் மிருகத்தனமாக நடந்து கொள்கிறார் என்பதுதான்.
அது பரதேசி படப்பிடிப்பின்போது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. ஆனால் அவர் நடிப்பு என்பதை உணர்வுபூர்வமாக செய்ய வேண்டும் என்பதில் இன்றுவரை விடாப்பிடியாக இருப்பவர். அந்தவகையில் சேது, பிதாமகன், பரதேசி போன்ற தனக்கே உரித்தான பாணியில் அதேசமயம் தயாரிப்பாளர்களின் கையைசுடாத படங்களை இயக்குவதில் வல்லவர்.
சமீபத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாக இருந்த அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார். முழு படப்பிடிப்பும் முடிந்து தயாரிப்பாளருக்கு படம் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் பாலா படத்தில் இருந்து ஒதுங்கினார்.
அதன் பிறகு தற்போது ராமநாதபுரம் பகுதியை சுற்றிய கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளதாகவும், அதில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. மேலும் இரண்டு ஹீரோக்கள் கதை என்று ஒன்றை தயார் செய்து இருப்பதாகவும், அதற்காக நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் பாலா படைப்பில் புதிய படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.
