இயக்குனர் பாலா படத்தில் நடிப்பது என்றால் ஒரு சினிமா யூனிவர்சிட்டிக்கே சென்றது போல் இருக்கும் என்பார்கள். தாரை தப்பட்டை படப்பிடிப்பில் ஒரு துணை நடிகருக்காக பாலா செய்த நெகிழ்ச்சியான சம்பவத்தை முகநூலில் பகிர்ந்துள்ளார் ஜான் மகேந்திரன்.

தாரை தப்பட்டை படத்தில் இடம் பெற்ற மனிதன் ஆரம்பமாவது பாடல் படப்பிடிப்பு சுமார் இருபது நாட்கள் தஞ்சாவூரில் நடந்தது, வயதான பெரியவர் இறந்த ஊர்வலத்தில் சசிகுமார் தன் குழுவினருடன் பறை அடித்தபடி பாடும் பாடல் இது.இறந்த பெரியவராக நடித்தவர், தினமும் காலையில் சாப்பிட்டவுடன் பாடையில் ஏறி படுத்ததும், மதிய உணவிற்கு மட்டும் இறங்குவார், மீண்டும் படுத்து மாலை படப்பிடிப்பு முடியும் வரை பாடையில் படுத்திருப்பார்.

தொடர்ந்து இருபது நாட்கள், கடைசி நாள் நிஜ சுடுகாடு வரை அழைத்து செல்லபட்டார். படப்பிடிப்பு முடிந்து அந்த பெரியவர் கிளம்பும் பொழுது, பாலா சார் அந்த பெரியவரை தனியாக அழைத்து ஒரு தடியான கவரை கொடுத்து அனுப்பினார்.நிச்சயமாக அவர் ,எந்த வயதிலும் அவ்வளவு பெரிய தொகை பார்த்திருக்க மாட்டார்.“ வீட்டுக்கு போகும் போது சந்தோஷமா போகட்டுமே “ என்றார் பாலா சார். இதுதான் பாலா சார்…”