சசிகுமார் நடித்த தாரைத்தப்பட்டை படத்தை அடுத்து குற்றப்பரம்பரை கால கட்டத்தில் நடந்த ஒரு கதையை பாலா இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதோடு அந்த படத்தில் நடிக்க அரவிந்த்சாமி, விஷால், ஆர்யா, அதர்வா, ராணா என பல முன்னணி நடிகர்களிடமும் அவர் பேசி வைத்திருந்தார். அப்போது தான் இயக்கயிருக்கும் குற்றப்பரம்பரை கதையைத்தான் பாலா படமாக்குகிறார் என்று அதற்கு பாரதிராஜா எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அவர்களுக்கிடையே மோதல் வெடித்து அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

அதையடுத்து, அந்த படத்தை தொடங்கும்போதே பிரச்சினை ஏற்பட்டதால், வேறு கதையை இயக்கும் முயற்சியில் இறங்கிய பாலா, அந்த படத்தில் நடிக்க சாட்டை யுவன், சூப்பர் சிங்கர் பாடகி பிரகதி ஆகியோரை ஒப்பந்தம் செய்தார். அப்படம் படம் பிராமணர் சம்பந்தப்பட்ட கதையில் தயாராகயிருப்பதாக செய்திகள் உலவிக்கொண்டிருந்தன. ஆனால் தற்போது அந்த படம் குறித்து விசாரித்த போது, தனது புதிய படத்தை பிராமண பெண்ணுக்கும், தேவர் பையனுக்குமிடையே உருவாகும் காதலை மையப்படுத்தி பாலா இயக்கயிருப்பதாக கூறப்படுகிறது.