நான் சாதுவாய்டம்ப்பா.. “நான் கடவுளாக” பாலா மாறியும் பிரயோஜனம் இல்லை

இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யாவின் வெற்றிக்கூட்டணி நந்தா, பிதாமகன் படத்தைத் தொடர்ந்து, 20 வருடம் கழித்து மீண்டும் சூர்யாவின் 41-வது படத்தை பாலா இயக்குகிறார். இந்தப் படம் மீனவர் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன் உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களை அல்லோல படுகிறது பாலா மற்றும் சூர்யாவிற்கு பிரச்சனை . சூர்யா, பாலா படத்தின் சூட்டிங்கில் இருந்து வெளியேறிவிட்டார். இருவருக்கும் பிரச்சனை முற்றி விட்டது என்றெல்லாம் கட்டுக்கதை போய்க்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் அந்த செய்தி எதுவும் உண்மை இல்லை ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. அதாவது கன்னியாகுமரியில் 34 நாட்களாக இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஜூன் மாதத்தில் கோவாவில் நடைபெற போகிறது.

அதனால்தான் சூர்யா கன்னியாகுமரியிலிருந்து படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டே பேக்கப் செய்து விட்டார். ஆனால் யாரோ படக்குழுவில் புரளியைக் கிளப்பி விட்டனர். சூர்யா- பாலா இடையே பிரச்சனை ஆகிவிட்டது . படக்குழுவினர் எவ்வளவோ சமாதானம் செய்தும் முடியவில்லை சூர்யா கிளம்பிவிட்டார் என்று ஒரு பெரிய கட்டுக்கதையை ஏற்படுத்தி விட்டனர்.

ஆனால் இப்பொழுது பாலா முன்பைப் போல் இல்லை மனிதன் ரொம்பவும் சாந்தமாய் மாறிவிட்டார். விவாகரத்துக்கு பின் நிறைய மாற்றங்கள் அவரிடம் தெரிகிறது. அவரும் நான் முந்திமாதிரி இல்லை என்று காட்டி வருகிறார். நான் கடவுள் போல் அமைதியாகி விட்டேன். கோபப்பட்டு ஒன்னும் சாதிக்கப் போவதில்லை என பாலா சாந்தமாய் நடந்து கொண்டாலும் படப்பிடிப்பில் அவரை பார்த்தால் ஒரு டெரர் போல்தான் தெரிகிறது.

ஏனென்றால் அந்த அளவிற்கு இதுவரை பாலா படப்பிடிப்புத் தளத்தில் யார் எவர் என்பதெல்லாம் பார்க்காமல் தனக்கு வேண்டிய நடிப்பு வரவில்லை என்றால், அவர்களை வாயில் என்ன வார்த்தை வருவது என்பது கூட தெரியாமல் திட்டி விடுவார். ஆகையால் இவருடைய படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் படப்பிடிப்புத் தளத்தில் கொஞ்சம் பதட்டத்துடன் இருப்பார்கள். ஆனால் அப்போது இருந்த பாலா வேறு, இப்போது இருக்கும் பாலா வேறு என தற்சமயம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்