fbpx
Connect with us

Cinemapettai

யுவன் இசையில் ரியோ ராஜ்- ரம்யா நம்பீசன் நடிக்கும் பட டைட்டில் போஸ்டர் வெளியானது.. இது வடிவேலு டயலாக் ஆச்சே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யுவன் இசையில் ரியோ ராஜ்- ரம்யா நம்பீசன் நடிக்கும் பட டைட்டில் போஸ்டர் வெளியானது.. இது வடிவேலு டயலாக் ஆச்சே

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அதர்வாவின் பானா காத்தாடி, செம போத ஆகாத படங்களை இயக்கியவர். இவர் இயக்கம் மூன்றாவது படத்தில் ஹீரோவாக ரியோ ராஜ், ஹீரோயினாக ரம்யா நம்பீசன் நடிக்கின்றனர். மீண்டும் யுவன் தான் இவர் படத்திற்கு இசை அமைக்கிறார். போக்கிரி படத்தில் வடிவேலுவின் பிரபலமான டயலாக் ஆன “பிளான் பண்ணி பண்ணனும்” என்பதனை படைத்தலைப்பாக படக்குழு வைத்துள்ளனர்.

Positive Print Studios இப்படத்தை தயாரிக்கின்றனர். ராஜசேகர் ஒளிப்பதிவு, ஷாம் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பாலசரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், பழைய ஜோக் தங்க துரை, மதுரை சுஜாதா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Plan panni pannanum title look

இப்படத்தில் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றதாம். படத்தில் பாடல்கள் மிகப்பெரிய ஈர்ப்பாக இருக்கும் என்கின்றார் இயக்குனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top