Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் விஜய் வைத்து படம் இயக்கபோகிறேன் அட்லீயின் சரவெடி அப்டேட்
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றால் அஜித் விஜய் ஆவார் இவர்கள் யாருடன் இணையப்போகிறார்கள் எந்த இயக்குனர் இவர்களை இயக்க போகிறார்கள் என்று பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்புகிறது, இவர் கடைசியாக எடுத்த மெர்சல் படத்தின் வசூலை பார்த்தாலே தெரியும் இந்த வகையில் அட்லி அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.
இந்த நிலையில் மாஸ்ஸான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் அட்லி ஆம் இவர் அஜித் விஜய் இருவரையும் வைத்து ஒரு படம் இயக்க போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது இந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது, ஆனால் இந்த செய்தியை வெளியிட்ட சன் நிறுவனமே அந்த ட்வீட்டை டெலிட் செய்துள்ளது.
ஆனால் அட்லி சொன்னது உண்மைதான் அவர் இன்று திருபதி சென்றுள்ளார் அங்கு பிரபல பத்திரிக்கை சந்திப்பில் அவர் அவ்வாறாக கூறியுள்ளார்.
