Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதிர்ஷ்டக்கார பையன் அட்லீ.. ட்விட்டரில் வந்த ஹாலிவுட் அழைப்பு.. மிரண்டு போன ரசிகர்கள்
இயக்குனர் சங்கரின் இரும்பு பட்டறையில் இருந்து வெளிவந்து தங்கமாக மாறி தற்போது தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் யார் என்றால் அது நம்ம அட்லீ தான். படத்தின் கதைகள் ஏற்கனவே கேள்விப்பட்டதாக இருந்தாலும் அதனை காட்சிப்படுத்துவதில் கைதேர்ந்தவர்.
ராஜா ராணி என்ற வெற்றிக்குப் பிறகு தளபதியுடன் கைகோர்த்த இவர், தொடர்ந்து மூன்று படங்கள் என்ற வீதத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் முன்னாடி இருக்கிறார்.
இந்நிலையில் இந்த பையனுக்கு அதிர்ஷ்டத்தின் மேல் அதிர்ஷ்டமாக ஹாலிவுட் புரொடியூசர் பில் டியூக், அட்லீ ஹாலிவுட் படம் எடுக்க அழைத்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், ஹாலிவுட்டுக்கு உங்களை வரவேற்கிறேன். நம் நாடுகள் இணைந்து படம் தயாரிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என அட்லீயிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அட்லீ, அது கடினம் என்பது வெறும் கருத்து மட்டுமே. சினிமாவின் காதலுக்காக வெவ்வேறு நபர்கள் ஒன்று சேர்வது எளிதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். உங்கள் உரைக்கு நான் மதிப்பு அளிக்கிறேன். மேலும் பெரிய கனவுகள் இப்படிதான் ஆரம்பமாகின்றன. உங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் நன்றி என ரிப்ளை செய்துள்ளார்.
தளபதியின் விஜய்யின் செல்லப்பிள்ளையாக மாறிய அட்லீயின் இந்த ட்வீட்டை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

atlee-tweet
