Tamil Cinema News | சினிமா செய்திகள்
தம்பி சமந்தா பிரபு, நீ கலக்கிட்ட : பாராட்டும் இயக்குனர் அட்லீ – பிரியா ஜோடி !
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப்படமான “மகாநதி” (தெலுங்கு பதிப்பு) பார்த்திட்டு தான் இப்படி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
மகாநதி

Mahanati
இந்தப் படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். சமந்தா ஜமுனாவாகவும், நாக சைதன்யா நாகேஸ்வர ராவாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி விஜய் தேவாரகொண்டா, ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், மோகன் பாபு எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
தமிழில் இப்படம் நாளை ரிலீசாகிறது, எனினும் தெலுங்கில் முன்பே வெளிவந்துவிட்டது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பை பார்த்த நம் இயக்குனர் படக்குழு மற்றும் அணைத்து நடிகர் நடிகைகளையும் புகழ்ந்துள்ளார்.
“மகாநதி – சாவித்ரி அம்மா அவர்களை பற்றிய ரம்மியமான, எமோஷனலான மற்றும் இன்ஸ்பிரஷன் தரும் பயோபிக் படம். கீர்த்தி மாயாபஜார் பாடல் நடனத்தில் சாவித்ரி அவர்களை நம் கண் முன்னே கொண்டு வந்துவிட்டார். தம்பி சமந்தா நீயும் கலக்கிட்ட. படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள். இது போன்ற மறக்கமுடியாத படைப்பை கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி.” என்று தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
#Mahanathi classic ,emotional inspirational bio epic of savithri Amma @KeerthyOfficial brought back the legendary actress hats off espl Mayabazar dance @Samanthaprabhu2 Thambi u rocked , congrats to whole team & Spl Thx to @VyjayanthiFilms for this unforgettable classic … pic.twitter.com/2xvylpqufy
— atlee (@Atlee_dir) May 9, 2018

Mahanathi
மேலும் சில நிமிடங்களில் நம் இயக்குனர் அட்லீயின் மனைவி ப்ரியாவும் இதே போல் டீவீடியுள்ளார். அதில் “கீர்த்தி டார்லிங் அசத்தலான நடிப்பு உன்னுடையது, சாவித்ரி அவர்களை கண் முன் மீண்டும் கொண்டு வந்துவிட்டாய். பாப்பா சமந்தா உன்னோட ரோலும் அழகு. எனக்கு மிகவும் பிடித்துள்ளது.”
Truly hats off to the entire team #mahanati A bio epic of #SavitriGaru portrayed so beautifully with so much of respect,passion & love by @VyjayanthiFilms @KeerthyOfficial darling u wer mind blowing u truly brought bk #SavitriGaru @Samanthaprabhu2 papa loved ur character u rocked pic.twitter.com/DYX1L2hmKX
— Priya Mohan (@priyaatlee) May 9, 2018
இது போன்ற செலிபிரிட்டி ஜோடிகள் புகழ்வது, நமக்கும் படத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
