Vijay-atlee

ஆந்திரா, தெலுங்கானாவில் சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான அதிரிந்தி படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

mersal

விஜய்யின் மெர்சல் படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ. 225 கோடிக்கு மேல் வசூலித்து பல நடிகர்களின் படங்களின் சாதனையை முறியடித்திருக்கிறது.

உலகில் அனைத்து நாடுகளிலும் விஜய்யின் மெர்சல் படம் வசூல் சேர்த்துவருகிறது.

தற்போது தெலுங்கில் வெளியாகி படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் வேறொரு புரட்சியை மெர்சல் செய்யும் என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

mersal-box

விஜய், இயக்குனர் அட்லீ, ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோர் துபாய் சென்றிருக்கிறார்கள்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து விஜய் படக்குழுவுக்கு சிறப்பு பார்ட்டி கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.இந்நிலையில் தான் விஜய் துபாய் சென்றுள்ளார்.

mersal vijay
mersal vijay

விஜய் தனியாக துபாய் செல்லவில்லை. அவருடன் அட்லீயும், மெர்சல் படத்தின் ஒளிப்பதிவாளர் விஷ்ணுவும் சென்றுள்ளனர். விஜய் கடற்கரையோரம் நின்று கொண்டிருந்ததை மக்கள் பார்த்துள்ளனர்.

மெர்சல் பட வெற்றியை கொண்டாடவே விஜய், அட்லீ, விஷ்ணு துபாய் சென்றார்களாம். ஆனால் மூன்று பேர் மட்டும் சென்றதால் மெர்சல் 2 படத்திற்கான டிஸ்கஷனோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

vijay

விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மெர்சல் தான் மெகா ஹிட் படம் என்கிறார்கள். அதனால் அவர் மீண்டும் அட்லீயுடன் கைகோர்க்கிறாரோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

விஜய், அட்லீ வெற்றிக் கூட்டணி மெர்சல் 2 படத்தில் சேர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். திரும்ப வர்றோம் தெறிக்க விடுறோம் என்று தங்களின் விருப்பத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர் ரசிகர்கள்.