Tamil Cinema News | சினிமா செய்திகள்
காப்பி அடிக்கிற அட்லீக்கு 25 கோடி.. கஷ்டப்பட்ட லோகேஷ்க்கு வெறும் 50 லட்சம்.. என்ன உங்க நியாயம்
தமிழ் சினிமாவில் அட்லீக்கு கதை திருடுபவர் என்ற பட்டப்பெயரும் உண்டு. காரணம் அவர் இதுவரை எடுத்த நான்கு படங்களும் இதற்கு முன் வெளிவந்த தமிழ் படங்களில் இருந்து சுடப்பட்டது தான் என்பதைச் சிறுகுழந்தை கேட்டாலும் சொல்லிவிடும்.
இருந்தும் தளபதி விஜய் போன்ற பெரிய நடிகருடன் இணைவதால் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என நினைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு கதைகளைத் திருடி வருகிறார். இதுகுறித்து இயக்குனர் சங்கம் எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பது தெரியவில்லை.
இந்த வருட தீபாவளிக்கு வெளியான பிகில் மற்றும் கைதி ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. ஆனால் கதை ரீதியாக வெற்றி என்றால் அது லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய கைதி படத்துக்குத்தான். ஹீரோயின்கள் மற்றும் பாடல்கள் இல்லாமலும் என்னால் ஹிட் கொடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்பட்டவர்.
அவர் தற்போது தளபதி-64 படத்தை இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அவருக்கு சம்பளம் வெறும் 50 லட்சம் மட்டுமே. இதனால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள், கதை திருடும் இயக்குனருக்கு 25 கோடி சம்பளம், ஆனால் கஷ்டப்பட்டு கதை எழுதும் இயக்குனருக்கு வெறும் ஐம்பது லட்சம் சம்பளமா? என தயாரிப்பு தரப்பை வெளுத்து வாங்கி வருகிறது.
அட்லி விஷயத்தில் தயாரிப்பு தரப்பிடம் தலையிடும் விஜய், லோகேஷ் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
