Tamil Cinema News | சினிமா செய்திகள்
தெறி, மெர்சல், பிகில்- எந்த படத்தின் அடுத்த பார்ட் அட்லீ இயக்கப்போகிறார் தெரியுமா ?
கோலிவுட்டில் இன்றைய கலாச்சாரம் பார்ட் படங்கள் எடுப்பது தான். ஒரு படம் ஹிட் அடித்தால், அதன் இரண்டாம் பாகம் உண்டா ? என்ற கேள்வி வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் இம்முறை தீபாவளிக்கு வெளியான கைதி மற்றும் பிகில் இரண்டுமே ஹிட் அடித்துள்ளது. ஏற்கனவே கைதி பட இயக்குனர் அடுத்த பார்ட் வரும் என உறுதிகொடுத்துவிட்டார்.
இயக்குனர் அட்லீ – விஜய் அவர்களுடன் இணைந்து ஹாட் ட்ரிக் வெற்றி கொடுத்துள்ளார். முந்தயை இரண்டு படங்களை காட்டிலும் இப்படத்தில் விஜய் அவர்களை மாசாகவும் அதே சமயம் ஸ்டைலிஷ் ஆகவும் காமித்துள்ளார். அதிலும் பலருக்கு ராயபுரம் ராயப்பன் ரோல் மிகவும் பிடித்துவிட்டது.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் ராயப்பன் அவர்களின் உருவான விதத்தை, பிகிலுக்கு முன் கதை போல பட பண்ணுங்கள் என கேட்டார்.
#Verithanam 1st half.
I can only say two sentences.
My Mom is crying.
Need a rayappan prequel very badly.#Bigil— Ajay (@Aj_Ajy) October 26, 2019
இயக்குனர் அட்லீயும் செஞ்சிட்டா போச்சு நண்பா என பதில் தட்டியுள்ளார்.
Senjutaaaaaa pochuuuuu nanba https://t.co/msXYx9DzTi
— atlee (@Atlee_dir) October 26, 2019
பட ஹிட் நடித்துள்ள சூழலில் சாமானிய ரசிகனின் டீவீட்க்கு பதில் தட்டுகிறார் எனில், கட்டாயம் அந்த ஐடியா இருக்கு என்றே தோன்றுகிறது.
