மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் எல்லா மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். இவர் அடுத்து ஒரு தமிழ் படத்தை இயக்க இருக்கிறார். அதற்காக தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகை மற்றும் உதவி இயக்குநர்கள் தேவை என்று பதிவிட்டுள்ளார்.

வித்தியாசமான முறையில் குறிப்பிட்டுள்ள பதிவில் இருந்து, இந்த வாட்டி படத்தில் நடிக்க பாட்டு பாடவும், நடிக்கவும் தெரிஞ்ச பொண்ணை தேடுகிறோம். கர்னாடிக் மியூசிக் தெரிஞ்சா சந்தோஷம். ஏன்னா எங்களுக்கு தெரியாது. வயது 16- 26. 1 பையன், 1 பொண்ணு என இரண்டு உதவி இயக்குநர்கள் தேவை. தமிழ் நல்லா தெரியணும், தங்கிலீஷ், இங்கிலீஷ் புரியற ஆளா இருக்கணும். அது தான் நாங்க கேக்குற குவாலிட்டி என்று குறிப்பிட்டுள்ளார்.