Tamil Cinema News | சினிமா செய்திகள்
படத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.
Published on

அஜய் ஞானமுத்து லயலோவில் விஸ்காம் முடித்து, கூடவே சினிமா மேக்கிங்கில் டிப்ளமோ முடித்தவர். நாளைய இயக்குனர் சீசன் ஒன்றில் இறுதி வரை வந்தவர். இயக்குனர் முருகதாஸிடம் 7 ஆம் அறிவு, துப்பாக்கி படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர்.
அருள்நிதியை வைத்து முதல் படமான “டெமோண்டே காலனி” இயக்கியவர். அதன் பின்னர் தற்பொழுது ஆக்ஷன் ஜானரில் வெளியாகியுள்ள “இமைக்கா நொடிகள்” படமும் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இவர் தன் ட்விட்டரில் “சில நாட்களாக நிறைய நபர்கள் கேட்கிறார்கள், அதனால் தெளிவுபடுத்துகிறேன். டெமோண்டே காலனி பட பிற மொழி ரிமேக் உரிமை தேனாண்டாள் பிலிம்ஸ் இடம் தான் உள்ளது. இமைக்க நொடிகளை பொறுத்தவை என்னிடம் பேசலாம், ஏனென்றால் 50 % ரிமேக் உரிமை என்னிடம் உள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்
பிழைக்க தெரிந்த பிள்ளை, காற்றுள்ள பொழுதே தூற்றிக்கொள்கிறது.
