Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தந்தை வழியில் சிம்பு.. இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் களமிறங்குகிறார்

தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகனான நடிகர் சிம்பு, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்குப் பிறகு வேறு படங்களில் கமிட்டாகாமல் சிறிது இடைவெளி விட்டிருந்தார். இந்த இடைவெளி அவர் மீது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இனிமேல் சிம்பு நடிக்கவே மாடடார். நடிகைகளைப் போல திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போகிறார் என்றெல்லாம் தகவல்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தன. கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களைக் கவர்ந்த ஓவியாவைத்தான் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என கூறப்பட்டது. இந்த சூழலில் சிம்பு இசையும் ஒரு பாடலை ஓவியா பாட, இதுதான் சமயம் என அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக சிலர் வரிந்து கட்டினர். ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. ஓவியா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாகி விடடார்.

சிம்புவும் மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படம் மூலம் நடிகராக கேரியரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இதுவரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்துக்கு வர மாட்டார், கூடுதல் வசதிகள் கேட்டு அடம்பிடிப்பார் உள்ளிட்ட புகார்கள் சிம்பு மீது இருந்தது. ஆனால், மணிரத்னம் படத்தின் ஷூட்டிங்கிற்கு குறித்த நேரத்தில் வந்து படக்குழுவை ஆச்சர்யப்படுத்தியதோடு, தனது காட்சிகளை சரியான டைமுக்கும் முடித்துக் கொடுத்து அசத்தினார். விஜய் சேதுபதி, ஜோதிகா, அர்விந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி என சிம்பு தவிர பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

செக்கச்சிவந்த வானம் படத்துக்குப் பின்னர் அவர் கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இயக்குநர் விரைவில் முடிவாக இருக்கும் இந்த படத்துக்காக சிம்புவுக்கு மிகப்பெரிய தொகை ஒன்று சம்பளமாகப் பேசப்பட்டிருக்கிறதாம். அஜித்தின் வீரம் மற்றும் விஜயின் பைரவா ஆகிய படங்களைத் தயாரித்தது விஜயா புரடக்‌ஷன்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு அடுத்ததாக, ஒரு படத்தை இயக்க சிம்பு முடிவெடுத்திருக்கிறார். இந்த இரு படங்களையும் முடித்த பின்னர், கிளாசிக் லவ் ஸ்டோரியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க இருக்கிறார். கௌதம் மேனன் – சிம்பு – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாக இருக்கும் அந்த படத்தை லைகா புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தில் முதலில் மாதவன் நடிப்பதாக இருந்தது. இந்த மூன்று படங்கள் முடிந்த பின்னர், கபாலி படத்தைத் தயாரித்த கலைப்புலி தாணுவின் வி புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக சிம்பு ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தனது அடுத்த படத்துக்கான டிஸ்கஷனில் சிம்பு தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரகசியமாக நடைபெற்று வரும் அந்த டிஸ்கஷனில் சிம்புவின் நலம் விரும்பிகள் பலரும் கலந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சிம்புவே இயக்கி, தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top