Connect with us

Cinemapettai

விஜய்யை பார்த்து ஒரு கூட்டம் அஞ்சுகிறது.. விளாசி தள்ளிய ஏ ஆர் முருகதாஸ்

vijay-murugadoss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யை பார்த்து ஒரு கூட்டம் அஞ்சுகிறது.. விளாசி தள்ளிய ஏ ஆர் முருகதாஸ்

தமிழ் சினிமாவில் எந்த நடிகர்களுக்கும் வராத பிரச்சனை தனிப்பட்ட முறையாக விஜய் படங்களுக்கு மட்டும் ஏன் வருகிறது என்ற காரணத்தை ஏ ஆர் முருகதாஸ் தர்பார் படம் பேட்டிகளின் போது அதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

ஆம். தமிழ்சினிமாவில் விஜய்-முருகதாஸ் கூட்டணி என்றால் தனிப்பட்ட முறையில் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கூட ஆவலாக திரையரங்குகளுக்கு படையெடுத்து வருவார்கள். இவர்கள் இருவரின் கூட்டணியிலும் வெளிவந்த கத்தி, துப்பாக்கி, சர்கார் போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஏ ஆர் முருகதாஸ் ரஜினிகாந்தை வைத்து தர்பார் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். வரும் 9ம் தேதி ரிலீஸாகும் இந்த படத்தை உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல நடிகர் மனோபாலா அவர்களின் யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில், ஏன் விஜய்-முருகதாஸ் கூட்டணி என்றால் மட்டும் ஏன் பிரச்சனை வருகிறது என கேட்டுள்ளார்.

அதற்கு முருகதாஸ், என் படத்திற்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் வருவதில்லை. ஆனால் விஜய் சார் படம் என்றால் நான் இயக்கவில்லை என்றால் கூட பிரச்சனைகள் வருவதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவரின் வளர்ச்சி இங்குள்ள யாருக்கோ பிடிக்கவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது.

மேலும் அவரின் அசுர வளர்ச்சி கண்டு பயப்பட ஆரம்பித்துள்ளனர். இதனாலேயே அவரது படத்திற்கு பிரச்சனைகள் எழுகின்றன. மேலும் அவர்கள் பிரச்சனை பண்ணுவதுதான் விஜய் அவர்களின் வளர்ச்சி என்பது யாருக்கும் தெரியவில்லை என போட்டுத் தாக்கியுள்ளார்.

இந்த விஷயம் தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது. முன்னதாக தர்பார் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top