Connect with us
Cinemapettai

Cinemapettai

பொங்கலுக்கு OTT ரிலீஸாகும் புதிய தமிழ் படங்கள் லிஸ்ட்.. கடும் போட்டியில் பிரபல நடிகர்கள்!

ott-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொங்கலுக்கு OTT ரிலீஸாகும் புதிய தமிழ் படங்கள் லிஸ்ட்.. கடும் போட்டியில் பிரபல நடிகர்கள்!

தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் OTT ரிலீஸ் ஆவதில் ஆர்வம் காட்டி வருவது தியேட்டர்காரர்கள் இடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

நீண்ட நாட்களாக பூட்டி வைத்திருந்த தியேட்டர்கள் சமீபகாலமாகத்தான் திறக்கப்பட்டது. ஆனால் நூறு சதவீத பார்வையாளர்கள் இன்னும் தியேட்டருக்குள் அனுமதிக்காத நிலையில் முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து OTTயை நோக்கி படை எடுத்து செல்கின்றனர்.

வருகிற பொங்கலுக்கு தியேட்டரில் மாஸ்டர் படம் வெளியாகும் என அரசல்புரசலாக செய்திகள் வந்தாலும் 100 சதவீத பார்வையாளர்கள் வந்த பிறகுதான் மாஸ்டர் ரிலீஸ் உறுதி செய்யப்படும் என்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்யும் விஜய்யின் படத்திற்கே இந்த கதி என்றால் மற்ற நடிகர்களின் நிலைமையை யோசித்துப் பார்க்கவேண்டும் அல்லவா. அப்படித்தான் தற்போது அடுத்தடுத்து சில படங்கள் நேரடியாக பொங்கலுக்கு OTTயில் ரிலீசாக உள்ளன.

விஷால் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் சக்ரா. அதனைத் தொடர்ந்து பிரபல மலையாள படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் மாதவன் நடித்த மாறா என்ற இரண்டு படங்களும் தற்போதைக்கு பொங்கலுக்கு நேரடியாக OTTயில் வெளியாக உள்ளன.

chakra-cinemapettai

chakra-cinemapettai

முதலில் OTTயில் ரிலீஸான படங்கள் பெரிய அளவில் கவனம் ஈர்க்காத நிலையில் சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களும் தங்களுடைய படங்களை OTTயில் வெளியிட ஆர்வமாக உள்ளனர்.

maara-cinemapettai

maara-cinemapettai

இதனைத் தொடர்ந்து வேறு சில படங்களும் பொங்கலுக்கு OTTயில் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். என்னதான் OTTயில் முன்னணி நடிகர்கள் நேரடி ரிலீஸ் செய்தாலும் எல்லாருமே சூனா பானா(சூரரைப் போற்று) ஆகிவிட முடியுமா பாஸ்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top