Connect with us
Cinemapettai

Cinemapettai

ott-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

OTT-யில் அடுத்தடுத்து வெளியாகும் 4 படங்கள்.. லிஸ்ட்ல எல்லாமே ஹீரோயின் ஆதிக்கம்

கொரானாவின் கோரப்பிடியில் சிக்கி உலகமே தவித்து வருகிறது. நம் தமிழகத்திலும் பலரது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல துறைகளில் சினிமா துறையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 150 நாட்களுக்கு மேலாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. 75 க்கும் மேற்பட்ட படங்கள் நம் கோலிவுட்டில் மட்டும் ரிலீசுக்கு தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த சூரரை போற்று நேரடியாக அமேசானில் ரிலீஸ் ஆகிறது. மேலும் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜகமே தந்திரம், விஷாலின் சக்ரா, விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, (நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள) கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன், எஸ் ஜே சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் உருவாகிய நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் மாதவன், அனுஷ்கா நடித்த சைலன்ஸ் போன்ற படங்களை நேரடி ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவது நாம் அறிந்த விஷயமே.

இந்நிலையில் வேறு சில படங்கள் நேரடி ரிலீஸ் செய்ய உறுதி ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அது பற்றியதே இந்த பதிவு. நாம் பார்க்கும் நன்கு படங்களுமே ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் என்பது தான் அதில் சுவாரஸ்ய சமாச்சாரம்.

கீர்த்தி சுரேஷ் – மகாநடிகை ஆன பின் வேற லெவல் சென்று விடலாம் என யோசித்தவர் யோசித்த வண்ணமே இருக்கும் படியான சூழல் எழுந்துள்ளது.

மிஸ் இந்தியா – தெலுங்கில் ரெடியாகும் ரொமான்டிக் ட்ராமா படம். தமன் இசை அமைக்கும் இப்படத்தை நரேந்திர நாத் இயக்கியுள்ளார்.

குட் லக் சஹி– தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரிலீஸ். நாகேஷ் குங்குநூற் இயக்கியுள்ளார். ஸ்போர்ட்ஸ் ஜானர் படம் இது.

ஐஸ்வர்யா ராஜேஷ் – பூமிகா – கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரெடியாகி உள்ள ஐஸ்வர்யாவின் 25 வது படம். ரதீந்திரன் பிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் ஜானர் படமாம்.

ரெஜினா காசான்ட்ரா – சூர்ப்பனகை – திருடன் போலீஸ் படப்புகழ் கார்த்திக் ராஜு இயக்கியுள்ள படம். தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரெஜினா தேடி எடுக்கும் பழங்கால பொக்கிஷமும் அதன் பின் நாடாகும் நிகழ்வுகள் தான் படத்தின் கதையாம்.

OTT release expected movies

ஆக இந்த நான்கு மகளிர் மட்டும் படங்களும் விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீசாகும் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

Continue Reading
To Top