Tamil Cinema News | சினிமா செய்திகள்
குண்டு படத்தை பாராட்டி அடுத்தடுத்து ஸ்டேட்டஸ் தட்டிய இயக்குனர் ராஜூமுருகன்.. சூப்பர் தோழர்
பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் பரியேறும் பெருமாள் தொடர்ந்து தயாரித்துள்ள படமே “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. அதியன்ஆதிரை இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உலக அரசியல் பேசும் உள்ளூர் சினிமாவாக இப்படம் உள்ளது. (குண்டு திரைவிமர்சனம்)
கார்ப்ரேட் அரசியல், ஜாதி பிரச்சனை, கம்யூனச கொள்கை, உலக அமைதி என பல விஷயங்களை ஜனரஞ்சக அம்சமும் கலந்து தரமான பொழுது போக்கு படமாக கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தை பார்த்துவிட்டு, ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி பட இயக்குனர் ராஜூமுருகன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.
ஒடுக்கப்பட்டவர்களின் வியர்வையும் ரத்தமும் உறைந்து கிடக்கும் தமிழகத்தின் கடைக்கோடி காயலாங்கடையிலிருந்து, ஹிரோஷிமாவில் அணுகுண்டுக்குப் பலியான ஜப்பானிய சிறுமி வரை, மானுடத்துக்கான அரசியலை, அறத்தை, மனிதத்தைப் பேசும் நமக்கான சினிமா.
— Director Rajumurugan (@Dir_Rajumurugan) December 9, 2019
நடிப்பில் பிரமாதப்படுத்தி, ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிற தோழன் @Dineshvcravi, தொடர்ந்து சமூகத்தின் மீதான அன்பை, அக்கறையை துணிவோடு தயாரிப்புகளாக்கிக் கொண்டிருக்கிற தோழன் @beemji உள்ளிட்ட படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்..! pic.twitter.com/Yi2HphjTJf
— Director Rajumurugan (@Dir_Rajumurugan) December 9, 2019
