ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

கல் நெஞ்சும் காதலில் கரையும்.. பிக்பாஸ்க்கு பிறகு ரட்சிதா குறித்து தினேஷ் சொன்ன தகவல்

BB7 Dinesh: விஜய் டிவி பொறுத்த வரைக்கும் சர்ச்சைகளை வைத்து டி ஆர் பி தேடுவதில் பயங்கரமான சேனல். அந்த வருடத்தில் யார் யார் சர்ச்சைகளில் சிக்குகிறார்களோ அவர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தூக்கி போட்டு, அவர்களை வைத்து டிஆர்பியை அள்ளி விடுவார்கள். கடந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கூட விவாகரத்து வரை சென்றிருந்தார் தாடி பாலாஜி மற்றும் நித்தியாவை கலந்து கொள்ள வைத்து அதன் மூலம் இந்த நிகழ்ச்சியை ஒரு சில வாரங்களுக்கு ஓட்டினார்கள்.

சின்னத்திரையின் காதல் ஜோடிகளாக இருந்தவர்கள் தான் தினேஷ் மற்றும் ரட்சிதா. இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நிறைய ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ரட்சிதா கடந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எல்லோருக்குமே ஞாபகம் இருக்கும். அப்போது ஃபேமிலி ரவுண்டில் தினேஷ் உள்ளே வருவார் எனக் கூட எதிர்பார்க்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இந்த ஏழாவது சீசனில் தினேஷ் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே ரட்சிதா தன்னை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், டைட்டிலை ஜெயித்து பிக் பாஸ் வின்னர் கப்பை ரட்சிதாவின் கைகளில் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் தான் என காதலில் உருகி இருந்தார். அதற்கு பிக் பாஸ் பார்வையாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்கள்.

Also Read:பிக்பாஸ் பைனல் மேடையில் நடந்த மிகப்பெரிய தகராறு.. அர்ச்சனா இன்னும் வெளியில் வராததற்கு இதுதான் காரணமா?

தினேஷ் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது முழுக்க முழுக்க ரட்சிதா மாறி இருப்பார் என்று பெரிய நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் ரட்சிதா தொடக்கத்திலிருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் யாரெல்லாம் தினேஷுக்கு எதிராக இருக்கிறார்களோ அவர்களை சப்போர்ட் செய்து வந்தார். தினேஷை குறித்து விசித்ரா பேசிய கருத்துக்கு கமலஹாசனே எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது ரட்சிதா வெளியில் இருந்து அதை ஆதரித்தார்.

ரட்சிதா குறித்து தினேஷ் சொன்ன தகவல்

நிலைமை இப்படி இருக்க பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கும் தினேஷ் இடம் ரட்சிதா குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன தினேஷ், நான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது எல்லாமே மாறி இருக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் ரட்சிதாவின் மனம் மாறவில்லை. என் வாழ்க்கை எப்படி இருந்ததோ அப்படியே தான் பிக் பாஸ் இல் கலந்து கொண்டு வெளியில் வந்த பிறகும் இருக்கிறது.

நான் இனி ரட்சிதாவை தொந்தரவு செய்ய விரும்பவில்லை, என்னுடைய புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க இருக்கிறேன் என தினேஷ் சொல்லி இருக்கிறார். உண்மையில் தினேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது ரட்சிதா அவர் மீது அதிக வெறுப்பை காட்டுகிறேன் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார். ரட்சிதா அமைதியாக இருந்தாலே அவர் மீது எல்லோருக்கும் நல்ல மரியாதை ஏற்பட்டு இருக்கும்.

Also Read:ஆண்டவருக்கு கொடுத்த பதவி.. கண்டுக்காமல் தூக்கிபோட்ட உலக நாயகன்

- Advertisement -spot_img

Trending News