Connect with us
Cinemapettai

Cinemapettai

‘குப்பை கதை’ தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கும் மீண்டும் வித்யாசமான தலைப்பு. பட கதை என்ன தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘குப்பை கதை’ தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கும் மீண்டும் வித்யாசமான தலைப்பு. பட கதை என்ன தெரியுமா ?

நடன இயக்குனராக மிகவும் பிரபலமானவர் தினேஷ். இவர் யதார்த்தமான கதை மாசத்தில் நடித்த படம் ‘ஒரு குப்பை கதை’. படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

இவர் நடிக்கும் இரண்டாவதும் படம் “நாயே பேயே”. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது. 25 முன்னணி இயக்குனர்கள் முன் நின்று க்ளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்துள்ளனர்.

‘தனி ஒருவன்’, ‘வழக்கு எண் 18/9’, ‘ஒரு குப்பை கதை’ ஆகிய படங்களில் எடிட்டராக பணியாற்றிய கோபிகிருஷ்ணா இப்படத்தை தயாரிக்கிறார். இவருடன் இணைந்து கட்டிங் வொட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை ஆர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கோபி கிருஷ்ணா, கலைஅரசி சாத்தப்பன், டாக்டர் ரேவதி ரெங்கசாமி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தை சக்திவாசன் இயக்குகிறார். ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், சாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.

வேலை எதற்கும் செல்லாமல், சின்ன திருட்டுகள் செய்து வருபவனாக நம் ஹீரோ. அதில் கிடைக்கும் காசை வைத்து தன நண்பர்களுடன் உல்லாசமாக ஜாலி செய்து வருகிறான். வாழ்க்கையில் செட்டிலாக பிளான் செய்கிறார்கள் இவர்கள்.

naaye peyae

நாயைக் கடத்த முயலும் இவர்கள் மாறாக பேயைக் கடத்திவிடுகின்றனர். பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவிப்பதை நகைச்சுவை கலந்து, ஹாரர் ஜானரில் படமாக உள்ளாராம் இயக்குனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top