Sports | விளையாட்டு
ரோகித் சர்மா மீது கொலைவெறி ஆன தினேஷ் கார்த்திக்.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்
தினேஷ் கார்த்திக்கின் இரண்டாம் கேரியர் 2019 உலகக்கோப்பை என்று சொல்லலாம் கிட்டதட்ட அனைத்து கதவுகளும் மூடப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கொடுத்தது நிதாஸ் கோப்பை தான்.
ரோஹித் சர்மா தலைமையில் 2018 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை மற்றும் வங்கதேசம் போன்ற மூன்று அணிகளும் நிதாஸ் கோப்பையில் பங்கேற்றது.
அதில் இலங்கை வெளியேறி இந்தியா மற்றும் வங்கதேசம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
முதலில் ஆடிய வங்கதேசம் 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது, பின்னர் ஆடிய இந்தியா கடும் போராட்டத்திற்கு பின் வெற்றி பெற்றது.
அந்த வெற்றியைப் பெற்றுத் தந்தவர் தினேஷ் கார்த்திக். கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பிற்கு சென்ற இந்தியா தினேஷ் கார்த்திக்கால் வென்றது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக்க்கு முன்னதாக களம் இறங்கி ஆட்டத்தை வங்கதேசத்திற்கு சாதகமாக மாற்றிக் கொடுத்தார்.
அவரை முன்னதாக களமிறங்கிய ரோஹித் சர்மா மீது கொலை வெறியுடன் இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
