Connect with us
Cinemapettai

Cinemapettai

dinesh karthik

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எனக்கு குருநாதரே இவர்தான்.! தினேஷ் கார்த்திக் யாரை சொல்கிறார் தெரியுமா.?

இலங்கையில் நடந்த முத்தரப்பு T20 இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் மிரட்டலான த்ரில்லர் வெற்றி பெற்றார். கடைசி ஒரு பந்தில் தான் தனது நிதானத்தை பயன்படுத்தி அடித்து வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியாவை வெற்றிபெற வைத்தார்.

இரண்டு ஓவருக்கு 34 ரன்கள் தேவைப்பட்ட மோசமான நிலையில், 19 வது ஓவரில் 22 ரன்களை அடித்தார் தினேஷ் கார்த்திக் இவர் கடைசி ஓவரில் கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்ட நிலையில் பொறுமையாகவும் நிதானமாகவும் பதட்டபடாமல் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தார் இதனால் இந்திய ரசிர்கள் மட்டும் இல்லாமல் இலங்கை ரசிகர்களும் சந்தோஷத்தில் இருந்தார்கள் அந்த பாம்பு டான்ஸ்க்கு பதிலடி என மீம்ஸ் பறக்க விட்டார்கள்.

போட்டிக்கு பிறகு செய்தியாளரை சந்தித்த தினேஷ் கார்த்திக் இதுபோல் வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்கும் திறமை அனுபவத்தில் தான் கிடைக்கும் இந்த திறமையை விலைக்கு வாங்க முடியாது அனுபவத்தில் தான் பெற முடியும் இது போன்ற சமையத்தில் நிதானமாகவும், பொறுமையாகவும் பதட்டபடாமல் கையாள வேண்டும்,

இதற்க்கு தோனி ஆடுவது சிறந்த உதாரணம், இதுபோல் கஷ்டமான நேரத்தில் விளையாடுவதை தோனி போன்றவரிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும், ஒரு ஆட்டத்தை எப்படி வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதை தோனியிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top