Connect with us
Cinemapettai

Cinemapettai

dhoni-dinesh-1

Sports | விளையாட்டு

தோனி ஸ்டைலில் ஸ்கெட்ச் போட்டு சிஎஸ்கேவை ஓடவிட்ட தினேஷ் கார்த்திக்.. வெற்றி ரகசியம் இதுதான்!

இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் லீக் ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான கேப்டன்சியின் மூலம் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

மேலும் இந்த ஆட்டத்தை கண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான அஜய் ஜடேஜா மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சியை  புகழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான அஜய் ஜடேஜா தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சி பற்றி, ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தினேஷின் கேப்டன்சி அற்புதமாக இருந்தது.

இத்தனை காலங்களாக தோனி எப்படி எதிரணிக்கு வியூகங்களை வகுத்து வெற்றிகளை குவித்தாரோ, அதேபோன்று தோனிக்கு வியூகத்தை வகுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் தினேஷ்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘10 ஓவர் வரை சுனில் நரைனை பயன்படுத்தாமல் சரியான நேரத்தில் நரைனை பந்துவீச வைத்து சென்னையை கூண்டோடு காலி செய்துள்ளார். சிஎஸ்கேவின் சேஸ் செய்யும் வல்லமைகளை உடைத்துள்ளார் தினேஷ் கார்த்திக்’ என்று கூறியுள்ளார்.

Dinesh Karthik F

Dinesh Karthik F

இதையடுத்து  சேவாக்கோ தினேஷை, ‘ஆட்டத்தைப் பார்க்கும் போது இது தினேஷ் கார்த்திக்கின் வியூகமாக இருக்குமோ எனச் சந்தேகித்தேன். நான் எதிர்பார்த்தது போலவே சுழல் காம்போவை பத்துப் ஓவர்களுக்கு பின்பு பந்துவீச செய்து வெற்றியைக் கொல்கத்தாவின் பக்கமாக திருப்பி இருக்கிறார் தினேஷ்’ என பாராட்டியுள்ளார்.

Continue Reading
To Top