fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வெஸ்ட் இண்டீஸ் டி 20 லீக்கில் தினேஷ் கார்த்திக். நோட்டீஸ் அனுப்பியது பிசிசிஐ

Sports | விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் டி 20 லீக்கில் தினேஷ் கார்த்திக். நோட்டீஸ் அனுப்பியது பிசிசிஐ

34 வயதான தினேஷ் கார்த்திக் சர்வதேச தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிக நாட்களை இழக்க முக்கிய காரணம் தோனி என்றால் அது மிகையாகாது. எனினும் விக்கெட் கீப்பிங் தவிர்த்து தனது பேட்டிங் மற்றும் பீல்டிங் திறனால் பேட்ஸ்மானாக மட்டும் மூன்று பார்மட்களிலும் ஆடி வருபவர். உலகக்கோப்பையில் தான் இந்தியாவிற்காக ஆடினார். அதன் பின் தேர்வாளர்கள் இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

இந்நிலையில் ஒப்பந்த விதிமுறையை மீறியதாக தினேஷ் கார்த்திக்குக்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மற்ற நாடுகளை போல் வெஸ்ட் இண்டீசிலும் டி 20 லீக் நடந்து வருகின்றது. அந்த கரிபீயன் பிரிமியர் லீக், CPL போட்டிகள் சமீபத்தில் துவங்கியது. அதில் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி என்ற டீம்மின் ஜெர்சி அணிந்து, பயிற்சியாளர் ப்ரெண்டன் மக்குளம் அருகில் ட்ரெஸ்ஸிங் ரூமில் தினேஷ் கார்த்திக் இருந்த காட்சிகளில் நேரலையில் காமிக்கப்பட்டது. உடனே இணையத்தில் பலரும் யுவராஜ் சிங் கனடா டி 20 லீக் போட்டியில் ஆடியது போல் தினேஷ் இங்கு சிபில் சென்றுள்ளார் என குழப்ப ஆரம்பித்தனர். இதையடுத்து அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Dinesh karthik – Brendon Mcullum

டிரின்பகோ நைட் ரைடர்ஸ் டீம்மின் ஓனர் ஷாருக் கான் மற்றும் பயிற்சியாளர் மக்குலம். மேலும் நம் ஐபில் இல் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கும் கொல்கத்தா டீமின் ஓனர் மற்றும் பயிற்சியாளர் இந்த இருவர் தான் என்பதும் நமக்கு தெரிந்த விஷயமே. கொல்கத்தா அணி பற்றி ஆலோசனை நடத்தவும், அந்த லீக்கில் ஆடும் சில வீரகளின் திறனை பற்றயும் அறியவே தினேஷ் மற்றும் அபிஷேக் நாயர் இருவரும் சென்றிருக்கக்கூடும்.

இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார் தினேஷ். மெக்குல்லம் அழைப்பின் பேரில் தான் அங்கே சென்றதாகவும், டரின்பாகோ அணிக்காக எந்த போட்டியிலும் தான் பங்களிக்கவில்லை என கூறி இருக்கிறார். மேலும் பிசிசிஐ அனுமதி இல்லாமல் அங்கே சென்றதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், இனி வெஸ்ட் இண்டீஸ்-இல் இருக்கும் வரை அந்த அணியின் உடை மாற்றும் அறையில் தான் அமர மாட்டேன் ஏன்டா உறுதி அளித்து இருக்கிறாராம் தினேஷ் கார்த்திக் அந்த கடிதத்தில்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top