ராஜ்கோட் : ஐபிஎல் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்த கீப்பர்களில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இதுவரை நடந்துள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் குஜராத் அணிக்காக விளையாடி வருகின்றார். இவர் இதுவரை விளையாடியுள்ள ஐபிஎல் போட்டிகளில் கீப்பராக செயல்பட்டு மொத்தம் 100 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்துள்ளார்.