எல்லா தண்ணீரும் பன்னீர் போல இருப்பதில்லை என்பதன் அர்த்தம் புரிந்து சசிகலா க்ரூப் ஆடி போய் இருக்கிறது. தேவை இல்லாமல் பன்னீரை கைவைத்து அவரை இழந்து விட்டோமோ என்று அலறுகிறது கார்டன் வட்டாராம்.

காரணம்””நான் பன்னீர் இல்லடா எடப்பாடிடா” என்று பன்ச் டயலாக் பேச ஆரம்பித்து விட்டார்.சசிகலா தரப்பு எதைச் சொன்னாலும் கேட்பதில்லை.

சிபாரிசுகளை குப்பையில் தூக்கிப் போடுகிறார். ஜெ.,இருந்த அறை,அவர் பயன்படுத்திய நாற்காலி என ராஜ கம்பீரம்.

சக அமைச்சர்களை விரட்டு விரட்டு என்று விரட்டி வேலை வாங்குகிறார். தினகரன் போன் செய்தால் உதவியாளரிடம் போனைக் கொடுத்து சி.எம். பிசின்னு சொல்லுஎன்று சொல்லச் சொல்கிறார்.

சசி அக்கா சொல்லச் சொன்னங்க என்று போன் வந்தால் அக்காவை என்னிடம் பேசச் சொல்லு என்கிறார்.

இதனால் எங்க வீட்டுப் பிள்ளை வீர எம்ஜிஆர் சவுக்கோடு வருவது போலவே இருக்கிறதாம் கோட்டையில். ஜெயக்குமாருக்கு நிதி அமைச்சர் கொடு என்பதற்கே நான்கு நாட்கள் தண்ணி காட்டி விட்டு அப்புறம் ஓகே. ஆனா அடிக்கடி தொந்திரவு செய்யாதிங்க என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லலி விட்டாராம்.

ஆடிப் போய் விட்டார் தினகரன். விரைவில் முதல்வர் கனவில் இருக்கும் அவருக்கு பெரிய அதிர்ச்சி.

ஆல்ரெடி ராஜினாமா கடிதம் வாங்கி வைத்திருந்தாலும் பன்னீர் போல என்னை மிரட்டி வாங்கினார்கள் என்று பல்ட்டி அடித்து விட்டால் சிக்கல் ஆகிவிடுமே என்று அலறி கதறுகிறார் என்கிறார்கள்.