News | செய்திகள்
கமலுக்கு ஆதரவு குரல்! டி.டி.வி தினகரன் புது முடிவு..
கடந்த மூன்று நாட்களாக அதிமுக உட்கட்சி பூசல்கள் பிரம்மாண்டமாய் வெடித்து வரும் நிலையில் இன்று டி.டி.வி தினகரன் அவர்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக பல தாக்குதல்களை தொடுத்துள்ளார்.
“எடப்பாடி அரசிற்கும் அதிமுகவிற்கும் துளியளவும் சம்பந்தமில்லை, அவரது ஆட்சி விரைவில் கலைக்கப்பட்டு புதியதொரு ஆட்சி அமைக்கப்படும். கொள்ளை புறம் வழியாக வந்து ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்றும் ஆசை கொண்ட எடப்பாடி மற்றும் இதர அமைச்சர்களுக்கு எப்போதும் எதிராக நாங்கள் இருப்போம்.
அவர்களது பகல் கனவை பலிக்க விடமாட்டோம். கமல் அவர்கள் கூறியது போல் இந்த ஆட்சியில் பல ஊழல்கள் எடப்பாடியின் தலைமையில் நடந்து வருகிறது. ஆட்சியை நடத்துவோர் தைரியம் இருந்தால் கமல்ஹாசன் கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமாக நிரூபணம் தரட்டும்.
அதைவிடுத்து கமல் மீது அதிகார பாய்ச்சல் பாய்வது முறையல்ல. அத்துமீருபவர்களுக்கு எங்களது மற்றொரு முகம் காட்டப்படும்”
இவ்வாறு டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். கமல் மீது தினகரனுக்கு வந்த இந்த திடீர் சார்பு குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டுவருகிறது.
சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
