திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., தங்கதுரை. 5ம் தேதியில் இருந்து தொகுதி பக்கமே தலைகாட்டாத தங்கதுரை, போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகம் வந்தார்.

அவர் கூறியதாவது: தொகுதி மக்கள், கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்ட பின் தான் பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்தேன்.  தொகுதியில் இருக்க வேண்டும் என்றதால் அலுவலகத்திற்கு வந்தேன். நான், போலீஸ் பாதுகாப்பு கேட்கவில்லை. ஜெயலலிதா இருந்த போதே, தினகரன் கட்சிப் பணி செய்தார். கட்சிக்கு நல்லதே செய்வார். அவர் முதல்வர் ஆகும் காலம், விரைவில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, ”சசிகலா விரைவில் முதல்வர் ஆவார்,” என, கூறினார். அதன்படி, பன்னீர்செல்வம் பதவியை சசி குடும்பத்தினர் பறித்தனர். அதே பாணியில் தற்போது, தங்கதுரை எம்.எல்.ஏ., கருத்து கூறியுள்ளார். இதனால், எடப்பாடியின் முதல்வர் பதவி விரைவில் பறிபோகும் என தெரிகிறது.