fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

டைம் மிஷினை வைத்து காமெடி கலாட்டா செய்யும் சந்தானம்.. மாஸ் காட்டும் டிக்கிலோனா பட புதிய ட்ரைலர் 2

santhanam

Videos | வீடியோக்கள்

டைம் மிஷினை வைத்து காமெடி கலாட்டா செய்யும் சந்தானம்.. மாஸ் காட்டும் டிக்கிலோனா பட புதிய ட்ரைலர் 2

தமிழ் சினிமாவில் காமெடியில் இருந்து ஹீரோவாக மாறிய சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சந்தானம் சில சறுக்கல்களை சந்தித்தாலும் சுதாரித்துக்கொண்டு ஹிட்டும் கொடுத்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு 2, A1 போன்ற படங்கள் வசூல் வேட்டையாடியது.

தற்போது சந்தானம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மூன்று விதமான கெட்டப்பில் நடிக்கின்ற படத்தின் டிக்கிலோனா(dikkilona) ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி பேசும் வசனம் தான் டிக்கிலோனா.

சந்தானம் இதுவரை பார்க்காத லுக்கில் இந்த படத்தில் இருப்பதால் இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பி விட்டன. மூன்று வேடம் என்பதால் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.

இந்நிலையில் டிக்கிலோனா படத்தின் டிரைலர் இணையதளங்களில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. சந்தானத்துடன் சேர்ந்து ஆனந்தராஜ், முனீஸ் காந்த், யோகி பாபு என அனைத்து காமெடி நட்சத்திரங்களும் அடித்திருக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top