சென்னை: கமல்ஹாசன், பிரபு கூட்டணியில் உருவான ’வெற்றி விழா’ படத்தின் டிஜிட்டல் டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற படங்களை மீண்டும் புதுப்பித்து திரையரங்குகளில் திரையிடுவது வழக்கமாகி விட்டது. நடிகர் திலகம் நடிப்பில் உருவான கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஒளி விளக்கு ஆகிய படங்களும், எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட படங்களும் மீண்டும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. மேலும் ரஜினி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘பாட்ஷா’. அப்படம் டிஜிட்டலில் மீண்டும் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

அதிகம் படித்தவை:  வெளியானது சிம்பு பாடிய கன்னட பட பாடல் ! ரெகார்டிங் வீடியோ உள்ளே !

இந்நிலையில் கமல் நடிப்பில் உருவான ‘வெற்றி விழா’ படத்தை மீண்டும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றி விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் பிரபு, அமலா, குஷ்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் டிஜிட்டல் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதேபோல் கமல் நடிப்பில் உருவான ‘மீண்டும் கோகிலா’ படமும் திரைக்கு டிஜிட்டலில் வரவுள்ளது.