fbpx
Connect with us

மிருகத்தனமாக உடலை வளர்க்க இதெல்லாம் செய்தாரா? ஆர்யாவின் டயட் இது தானாம்!

News / செய்திகள்

மிருகத்தனமாக உடலை வளர்க்க இதெல்லாம் செய்தாரா? ஆர்யாவின் டயட் இது தானாம்!

arya-bodyஆர்யா “தனிக்காட்டு ராஜா” எனும் தனது அடுத்த படத்தில் மலைவாழ் நபராக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக தனது உடற்கட்டையும் மிருகத்தனமாக அதிகரித்து வருகிறார் நடிகர் ஆர்யா.

இந்த அளவு உடற்கட்டை அதிகரிக்க ஒரு நாளுக்கு நாற்பது முட்டைகளும் (வெள்ளை முட்டை மற்றும்), இரண்டு கிலோ சிக்கனும் சாப்பிட்டு வந்திருக்கிறார் ஆர்யா. சிக்கனிலும், கொழுப்பு குறைந்த (லீன் மீட்) சிக்கனை தான் சாப்பிட்டு வந்திருக்கிறார்

தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து உடற்பயிற்சி செய்ய துவங்கிவிடுவாராம் ஆர்யா. 4 – 6 தவறாமல் இரண்டு மணி நேரம், தடகள வீரர்கள் பின்பற்றும் இண்டென்ஸ் பயிற்சிகளை மேற்கொண்டு தான் இந்த உடற்கட்டை ஏற்றி இருக்கிறார் ஆர்யா.

இதுபோக தான் எப்போதும் செய்யும், நீச்சல், சைக்ளிங் போன்ற பயிற்சிகளிலும் ஈடுப்பட்டு வருகிறார் ஆர்யா. ஆக மொத்தத்தில், தனிக்காட்டு ராஜா படத்தில், இதற்கு முன் காணாத ஆர்யாவை ரசிகர்கள் பார்த்து ரசிக்க முடியும். ஆனால், அவருக்கே உரித்தான அந்த ப்ளேபாய் லுக் போச்சே பாஸ்!

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top