புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கங்குவா படத்தை சிவா கண்டுக்கவே இல்லையா? என்ன நடந்துச்சு

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவானதுடன், தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்தியா முழுக்க ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் குவிந்திருந்த படம் கங்குவா. நிச்சயம் இப்படம் தமிழ் சினிமாவில் பெரும் மைல்கல்லாக இருக்கும். அதன் மேக்கிங், வசூல், நடிப்பு எல்லாம் காலத்துக்கும் பேசப்படும் என்ற எல்லோருமே கூறி வந்தனர்.

நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான கங்குவா படத்துக்கு கலவையான விமர்சனம் குவிந்து வருகிறது. இந்தப் படம் ரூ.2000 ஆயிரம் கோடி வசூல் குவிக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும், இப்படம் ஃபையராக வந்திருப்பதாக படக்குழுவினரும் போகும் இடமெல்லாம் புரமோசனில் கூறி வந்தனர்.

இப்படம் ரிலீசான பின்பு தியேட்டரில் இரைச்சல் அதிகமாக இருக்கிறது என புகார் வர, 2 புள்ளிகள் குறைப்படுவதாக தயாரிப்பாளர் கூறினர். இந்த நிலையில், இப்படம் போட்ட பணத்தை எடுத்துவிடும் என்றாலும் தயாரிப்பாளர் கூறிய அத்தனை கோடியை வசூலிக்காது என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்தப் படத்துல ஒன்னுமே இல்லை – அந்தணன் விமர்சனம்

கங்குவா படம் பற்றி சினிமா விமர்சகர் அந்தணன் கூறியதாவது;’’ எதிர்பாராத துன்ப அதிர்ச்சிதான். இப்படத்தை நம்பிக் கொண்டிருந்தவர்களின் நானும் ஒருவன். ஆங்கில பட த்துக்கு இணையாக இருக்கும் என இப்பட முன்னோட்டங்களைப் பார்த்து நினைத்தேன். இப்பட த்தைப் பார்க்க, அஜித், விஜய் ரசிகர்களும் கூட தியேட்டருக்கு வந்தனர்.

இப்படம் பாகுபலி அளவுக்கு இல்லை என்றாலும் நான் ஈ படத்துக்கு அளவாவது இருக்கும் என நினைத்தேன். அது இப்படத்தில் இல்லை. ஒரு படத்தில் எங்கு எமோசன், எங்கு காதல், ஆக்சன், செண்டிமெண்ட் இதெல்லாம் தனித்தனியாக தெரியனும். ஆனால் ஒலி அமைப்பு, இரைச்சல் அதே அளவில்தான் உள்ளது. தியேட்டரில் ஒலி அமைப்பு ஏறி இறங்கவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இப்பட த்தின் ஒளிப்பதிவுக்கு, டான்ஸூக்கு, நடிப்புக்கு, இசைக்கு, எடிட்டிங்கு என தனித்தனி நிபுணர்களை நியமித்துவிட்டதால் தனக்கு அதில் இயக்குவது மட்டும்தான் என சிவா நினைத்துவிட்டாரோ என்னவோ அதனால் மற்றவர்களின் பணிகளை அவர் உற்று நோக்கவில்லையோ என்பதால்தான் இப்படம் சொதப்பி விட்டது. இப்படத்தை கவனக்குறைவின்றி மோலோட்டமாக எடுத்துவிட்டார்’’ என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கங்குவாவைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் இப்படத்தை கொண்டாடுபவர்கள் உள்ளனர். இப்படம் தமிழ் சினிமாவில் முதல் நாள் வசூலில் 3வது இடம் பிடித்துள்ள நிலையில் விரைவில் 100 கோடியைக் கடந்து 500 கோடியை தாண்டி வசூல் குவிக்கும் என சூர்யா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News