எண்ணூர் துறைமுகத்தில், கமல்ஹாசன் நேற்று  நேரடியாக ஆய்வுகளை செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கமல் அரசியலுக்கு அடித்தளம் போட்டுவிட்டார் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், அவர் குறும்படம் எடுக்கத்தான் எண்ணூர் சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

kamal

கமல் தனது ரசிகர்களுக்கே தெரியாமல் செல்ல வேண்டும் என்பதற்காக விடிந்தும், விடியாமல் எண்ணூர் துறைமுகம் பகுதிக்கு போயுள்ளார்.

எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்தது வரவேற்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரிலேயே அரசியல் மற்றும் மக்கள் பிரச்னைகள் தொடர்பாக கருத்து தெரிவித்து வந்த நிலையில் முதன்முறையாக சென்னை எண்ணூர் கழிமுகப் பகுதியை நேரில் பார்வையிட்டார்.

kamal

அனல்மின்நிலைய கழிவு மற்றும் ஆக்கிரமிப்புகளால் இந்தப் பகுதியில் வடகிழக்குப் பருவமழையின் போது ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த கையோடு அதிகாலையில் நேரில் சென்று பிரச்னை என்ன என்பதை பார்த்து வந்தார்.

கமல்ஹாசனின் இந்த களப்பணிக்கு திருமாவளவன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில் கமல் கள ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்தது வரவேற்கத்தக்கது என்றார்.

kamal

ரேஷன் கடைகளில் சர்க்கரை விலைஉயர்வு பன்னாட்டு முதலாளிகள் லாபம் பெறவே வழிவகுக்கும் என்றும் இதேநிலை நீடித்தால் வருங்காலத்தில் ரேஷன் கடையே இல்லாத நிலை உருவாகும் என்று குற்றம்சாட்டினார். பணமதிப்பிழப்பை முதலில் வரவேற்ற ஸ்டாலின் தற்போது அதை எதிர்ப்பது ஏன்? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.